Thursday, September 16, 2010

என் அன்பே உனக்காக..

கண்களினால் பேசக்   கற்றுத்தந்தாய்..
கவிதைகளும் எழுதக்   கற்றுத்தந்தாய்..
கற்பனைகள் செய்யக்  கற்றுத்தந்தாய் ..
கனவுகளில்  வாழக் கற்றுத்தந்தாய் ..
இருபது  வருடமும்  பார்த்திரா
இயற்கையின் மாற்றம்  எனக்குள்  தந்தாய்..
நட்புடன்தான் வந்து நின்றேன்
நாளாகக்  காதலை எனக்குள் தந்தாய்..
காதலையும்  கொண்டு  வந்தேன் .
கண்ணே  தாயாகவே  மாறிப்  போனாய்..
எத்தகைய  தவமும்  செய்வேன்
அன்பே  இத்தைகைய  வரம்  ஒன்றிற்காக..
எத்தனை ஜென்மம்   கொண்டாலும்
அழகே  எனக்காக  நீயும்  வேண்டும்..
என் உறவாக.. என் உயிராக..

1 comment:

  1. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்!
    வரம் கிடைச்சுடுச்சா?

    ReplyDelete