அன்று..
குழு குழுவாய் திரிந்தோம்..
கூத்தடித்து கிடந்தோம்..
பேசாத நாள் இல்லை..
போகாத இடம் இல்லை..
பார்க்காத படம் இல்லை..
ரசிக்காத பெண் இல்லை..
கவலைகள் ஏதும் இல்லை..
துன்பத்தை கண்டதில்லை..
இன்று..
புழு புழுவாய் நெளிகின்றோம்..
பணிகளுடன் போரிடுகிறோம்..
பேசக்கூட நேரம் இல்லை..
பார்ப்பதற்கும் வழி இல்லை..
என்றாவது இணைக்கின்றது
நாம் அன்று இணைந்து வாங்கிய
கைபேசி..
புது நண்பர்கள் கிடைத்தாலும்..
உயிர் நண்பர்களுக்கு ஈடாகுமோ..
தோழர்களே..
தொலைதூரம் போனாலும்..
தொடர்புடன் நாம் நட்பு கொள்வோம்…
No comments:
Post a Comment