ஏதோ ஓர் ஞாபகம் நீ என்னருகில் இருப்பதாய்..
பேருந்தின் ஜன்னல் வழியே
உனைப் பார்த்து சிரிக்கிறேன்..
படுக்கையறையில் பக்கத்துத் தலையணையாக
உனைப் பார்த்து மயங்குகிறேன்..
காய்ச்சலின் கதகதப்பில்
உன் அணைப்பை உணர்கிறேன்..
கவிதையாய் மழை பெய்கையில்
உன் கால் கொலுசினொலி ரசிக்கிறேன்..
காதோரமாய் காற்று உரசினால்
நீ கண்ணாளா என்றழைப்பதைக் கேட்கிறேன்..
இக்கவி தீட்டும் நேரம் கூட
ஏதோ ஓர் ஞாபகம் நீ என்னருகில் இருப்பதாய்..
No comments:
Post a Comment