ஆயிரம் இரவுகளைக் கழித்துவிட்டேனடி..
கனவுகளிலே உன் கரம் பற்றி..
ஆயிரம் உறவுகளை ஒதுக்கிவிட்டேனடி..
உன்னோருத்தி உறவே போதுமென்று..
ஆயிரம் தருணங்களை இழந்துவிட்டேனடி..
என் காதல் முழுவதையும் கொட்டிவிட வாய்ப்பிருந்தும்..
ஆயிரம் ஜென்மமும் பிறந்திருப்பேனடி..
உன்னை மனம் முடிக்கும் முடிவோடு..
என் வாழ்நாள் முழுதும் காதிருப்பேனடி..
உன் விழியசைத்து எனை ஏற்றுக் கொள்வாயென…
பகலவன் நிலவிடம் நிதமும் சொல்லும் கவி இது…
No comments:
Post a Comment