மொழியே உன் இனிமையை
அவள் பேசியபோதே உணர்ந்தேன்..
இசையே உன் இனிமையை
அவள் பாடியபோதே உணர்ந்தேன்..
வாழ்வே உன் இனிமையை
அவளின் கரம்பற்றியபோதே உணர்ந்தேன்..
அன்பே உன் இனிமையை
அவள் அணைப்பில்தான் உணர்ந்தேன்..
அமுதே உன் இனிமையை
அவள் ஊட்டியபோதே உணர்ந்தேன்..
அறிவே உன் இனிமையை
அவள் புகட்டியபோதே உணர்ந்தேன்..
இறைவா உன் இனிமையை
அவளை என் தாயாகக் கொடுத்தபோதே உணர்ந்தேன்..
அம்மா பிள்ளை !
ReplyDelete