என் தேவதையின் பாதங்கள்
என் இல்லம் தொட்டன நேற்று..
இதுவரை இல்லாத பொலிவு
என் அன்னை முகத்தில்..
எப்பொழுதும் பார்த்திரா மகிழ்ச்சி
என் தங்கை மனதில்.
கண்கள் முழுதும் ஆசையுடன்
மனம் முழுதும் பாசமுடன்
இதழ் முழுதும் புன்னகையுடன்
என்றோ உரிமையோடு வரப்போகும்
இல்லத்திற்கு இன்றே வலது
பாதம் பதித்து உள்நுழைந்தாள்
என் அன்பானவள்..
பூத்துக்குலுங்கின மலர்கள்
என் தோட்டத்தில்..
குதித்தாடின மயில்கள்
என் மாடத்தில்..
ஒருநாள் முழுதுமாய்
ஓராயிரம் புன்னகை அவள் முகத்தில்..
எங்கள் உள்ளத்தில்..
போய்வருகிறேன் என விடைபெற்றாள்
மாலையில்..
போய் வா மகளே..
என் மருமகளாய்
வரும் காலம் வெகுதொலைவில்
இல்லையென வாழ்த்தி
விடையளித்தாள் என் அன்னை..
இவையாவும் நடந்தேற ..
எது நடந்தது என்ன நிகழ்ந்தது
என்றறியாமல் கனவுகளிலே
மிதந்துகொண்டு..
கண்கள் குளமாக நின்றேன் நான்..
இனியவளே..
உனை சிறையெடுக்கும் நாள் முதல்
நீதான் என் இல்ல மகாராணி..
அது நிகழ்ந்தேறும் வரை நீ
எங்கள் இதயங்களின் மகாராணி..